எத்தகைய சாவல்கள், அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கப்பட்டபோதும் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவிப்;;பு.
எத்தகைய சாவல்கள், அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கப்பட்டபோதும் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படை, பொலிசார் மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் மீது தாம் கூடுதலான நம்பிக்கை வைத்திருப்பதாக ஜனாதிபதி கூறினார். கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இதுவரை முப்படை, புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ததன் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கு முடிந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் முழுமையான கௌரம் முப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு உரித்தாகும். அம்பாறை உகண மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி மதிப்பீட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றுக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும், நாட்டின் நாளாந்த பணிகள் வழமையான முறையில் இடம்பெறுவதற்கும் வழி வகை செய்யப்பட வேண்டும். இதற்காக சிறந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். மொத்த மக்களின் ஒத்துழைப்பும், பாதுகாப்பு பிரிவினருக்கு கிட்ட வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் எதிராக தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.