இந்திய பாராளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்.

Share Button

இந்திய பாராளுமன்றத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்களிப்பு நாளையும், ஏழாம் கட்ட வாக்களிப்பு 19ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களின் கீழான இந்திய பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதைத் தொடர்ந்து, மே மாதம் 23ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதைத் தடுப்பதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம் கொண்டு சென்றவர்களிடமிருந்து பறக்கும் படைப் பிரிவினரால் இவ்வாறான பணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இவ்வாறான சோதனை நடவடிக்கைகளில் தென் மாநிலங்களிலிருந்தே கூடுதலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வாறான பணம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பணப் பெறுமதி 816.41 கோடி ரூபாவாகும். 1,253.50 கோடி ரூபா மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அரசாங்கக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை பெரும் எண்ணிக்கையிலானோர் பின்தொடர்வதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 50 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்பக்கத்தை பின்தொடர்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *