சுற்றுலாத் தொழில்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியிருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவிப்பு

Share Button

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் தொழில்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியிருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

 

மே மற்றும் ஜ10_ன் மாதங்களில் நாளொன்றிற்கு நான்காயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர வேண்டும். இருப்பினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிஸூ கோமஸ் கருத்து வெளியிடுகையில், இந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டில் நிலவும் அமைதி நிலை தொடர்பில் சர்வதேச ரீதியில் முக்கியமான செய்தி ஒன்றை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். சுற்றுலா மேம்பாட்டிற்காக சர்வதேச பிரசார திட்டமொன்று விரைவாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சுற்றுலாத் தொழில்துறைக்காக பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11