நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் உயர்ந்தபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share Button

நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தலைதூக்கியுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.

குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர போன்ற பிரதேசங்களின் தற்போதைய நிலையை கண்டறிவதற்காக பிரதமர் இன்று உரிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். தாக்குதலினால் சேதமடைந்த குளியாபிட்டிய பள்ளிவாசலையும் பிரதமர் பார்வையிட்டுள்ளார். வன்முறைகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு வெசாக் நிகழ்வை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *