நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை தோற்கடிக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்

Share Button

நாட்டை சீர்குலைக்கச் செய்ய சிலர் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அனைவரும் அரசியல் பேதங்கள் இன்றி கைகோர்ப்பது அவசியமாகும். நாட்டை அமைதிப் படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் கூடுதலான பொறுப்புக்கள் காணப்படுவதாக சபாநாயகர் கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராயவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்குமான பரிந்துரைகளை முன்மொழியக்கூடிய சகல அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதுபற்றி பாராளுமன்ற நிலையியல் குழுவுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். வெசாக் கொண்டாட்டத்தை எந்தக் குறையும் இன்றி நடத்துவது பற்றி மூன்று நிக்காயாக்களின் மஹாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் சபாநாயகர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் நாட்டிலிருந்து ஒழிக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதில்லை. ஊடகங்கள் மீது தடைகள் ஏற்படுத்தப்படவும் இல்லை. ஆனால், ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *