வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பொலிஸாருக்கு பணிப்புரை

Share Button

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய 14 பேரில் ஒன்பது பேர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோர் மினுவங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள். வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்களும், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஒன்பது பேர் அடங்குகிறார்கள். தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள 60 பேருக்கு எதிராக எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் வழக்கு தாக்கல் செய்யுமாறு பிரதமர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக இரண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் தலைமையிலான இரண்டு குழுக்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *