பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

Share Button

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் மூலப் பிரதிகள் தாக்கல் செய்யப்படாததால் அதனை விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படை ஆட்சேபனை கருத்தை முன்வைத்தார்.

அதன்படி, நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11