இந்திய பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் இன்று.

Share Button

17ஆவது லோக் சபா தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று ஆரம்பமாகும் என இந்தியத் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. மேலதிக வாக்களிப்பு உறுதிப்படுத்தல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இறுதி முடிவுகள் 4 முதல் 6 மணித்தியாலங்களால் தாமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தல் கடந்த 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 542 பாராளுமன்றத் தொகுதிகளில் ஏழு கட்டங்களாக இடம்பெற்றது. சுமார் 60 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். பிரதமர் நரோந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியும், அதன் பங்காளி கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்பில் உள்ளன. ராஹூல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு மத்தியில் ஆளும் தரப்பு போட்டியிடுகின்றது. இன்று காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *