மீனவர்களிடமிருந்து மீன்கள் இனி நேரடியாக கொள்வனவு  கடற்றொழில் கூட்டுத்தாபனம் நாளை முதல் ஆரம்பிக்கிறது

Share Button
மீனவர்கள், படகு உரிமையாளர்கள் ஆகியோரிடமிருந்து மீனை நேரடியாகக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமான முறையில் நாளை ஆரம்பிக்கவிருக்கிறது. தங்காளை மீன்பிடித் துறைமுகத்தில் இது தொடர்பான நிகழ்வு நாளை இடம்பெறவிருக்கிறது.
அமைச்சர் திலீப் வெதஆராச்சி நிகழ்வில் அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். முதற் கட்டமாக மீனவர்கள் பதிவு செய்யப்படவிருப்பதோடு, அதனைத் தொடர்ந்து மீனை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மீனவர்களுக்கு நியாயமான விலையை வழங்குவதும், நுகர்வோருக்கு சலுகை விலையில் மீனை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதும் இதன் நோக்கங்களாகும்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *