ராஹூல் காந்தி கட்சித் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா

Share Button

இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்து தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ராஹூல் காந்தி இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இன்று காலை புதுடில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்காக இராஜினாமா கடிதத்தை ராஹூல் காந்தி சமர்ப்பித்துள்ளார். இந்தக் கடிதத்தை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ராஹூல் காந்தி தொடர்ந்தும் இந்தப் பதவியை வகிக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை அடைந்ததை அடுத்து கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று ஆரம்பமானது. இதில் உரையாற்றிய ராஹூல் காந்தி தோல்விக்கான 100 சதவீதமான பொறுப்பையும் தான் ஏற்பதாக தெரிவித்தார்.

இதேவேளை, நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள பிரதமர் மோடி, அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மோடியின் வெற்றிக்காக அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *