தீவிரவாதத்தை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் அவசியம் – மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர்

Share Button

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பிரேரணைகள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதை அவர் பாராட்டியுள்ளார்.

நாட்டின் நலனுக்காக இதனை அமுற்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என மகாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தின் பிரதியை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கையளித்ததன் பின்னர் மகாநாயக்கர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வை பேணி வாழ்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், நாட்டின் ஒரு தரப்பினர் வன்முறையையும் பகைமையையும் பரப்புவதற்கு முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11