வில்பத்து வனாந்தரத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை
வில்பத்து வனாந்தரத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கு விசாரணை ஜூலை மாதம் 31ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த வழக்கு இரண்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. வழக்கின் தீர்ப்பை அறிவிக்க நீதியரசர் மஹிந்த சமயவர்தன தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.