இலங்கை மீதான பயண எச்சரிக்கை அறிவித்தலை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது

Share Button

இலங்கைக்கான பயண எச்சரிக்கை அறிவித்தலை சுவிட்சர்லாந்து நீக்கியிருக்கிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹேன்ஸ்பீற்றர் மொக் இன்று தனது உத்தியோகபூர்வ ட்;விட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக இதுபற்றி அறிவித்திருக்கின்றார்.

ஆனால், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இலங்கைக்கான பயண எச்சரிக்கை அறிவித்தலை நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சுவிட்சர்லாந்து தூதுவரின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *