முன்னாள் பாதுகாப்பு செயலாளரை எச்சரிக்கும் டிலான் பெரேரா எம்.பி.

Share Button

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புபாசிசவாதிகளின் கருத்துகளை வெளிப்படுத்தும் மேடையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார்.

அந்த மேடையில் கருத்துகளை தெரிவிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகளான கமல் குணரட்ன, சரத்வீரசேகர ஆகியோர் தொடர்பில் கவனமாக இருக்குமாறு திரு.டிலான் பெரேரா முன்னாள் பாதுகாப்புசெயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்களின் பாசிசவாத கருத்துகளால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஒருபோதும் பெற முடியாதுஎன்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்தெரிவித்தார்.

அண்மையில் கூட்டு எதிரணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார கருத்துதெரிவிக்கையில், ராஜபக்ஷ குடும்பத்தில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத ஒருவர் சமல் ராஜபக்ஷ என்றுகுறிப்பிட்டிருந்தார். எனவே ஜனாதிபதி வேட்பாளருக்கு அவர் பொருத்தமானவர் என்று திரு.வாசுதேவநாணாயக்கார குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் கோட்டபாய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றுபாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11