நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து பிரதமர் ஆலோசனை

Share Button

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு நெருக்கடியான நிலைமைகளை தவிர்ப்பதற்கானபுதிய மூலோபாயங்கள் பற்றி கவனம் செலுத்துமாறு கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க கூறுகிறார்.

நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக் கூடும் என்பதால் அதுபற்றி விசேடகவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கு இந்துசமுத்திர பிராந்திய முக்கிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாக பிரதமர்தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற, பண்டாரநாயக்க சர்வதேசராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற டிப்ளோமாதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்பிரதமர் உரையாற்றினார்.

அமெரிக்கா இந்திய பசுபிக் பிராந்தியத்திற்கென சிறந்த கருத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆசியபசுபிக் பிராந்தியத்திற்கு மேலதிகமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *