பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பது அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பும் கடமையுமாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share Button

பிரிவினைவாதத்தைத் தோற்கடிப்பது நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பும் கடமையுமாகுமென முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார். நியாயத்திற்காகவும் சரியான விடயங்களுக்காகவும் அனைவரும் குரல் எழுப்ப வேண்டுமென அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு நடத்திய சத்தியேக்ஷண நிகழ்ச்சியில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்….

திருமதி பேரியல் அஷ்ரப்

கலாசாரம் மாற்றமடைகிறது. இது உலக அளவில் நிகழும் மாற்றமாகும். முஸ்லிம் மக்கள் மத்தியில், இது தான் இஸ்லாம் என்பதை சித்தரிக்கும் புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இது கவலைக்குரிய விடயம. இவர்கள் இதனை இலங்கைக்குள் கொண்டு வந்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல இடமளித்தோமா என்ற கேள்வி உள்ளது. இதற்குள்ளே நின்று கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் என்ன செய்வது என்பதை ஆராய வேண்டும். இவ்வளவு நாள் கழிந்தும் பொதுவாக இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த எம்மால் முடியாமல் போயுள்ளது. இது துரதிஷ்டமானது. இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க எவருக்கும் ஆர்வம் இல்லையோ என்ற கேள்வியும் உள்ளது. எனவே, மனித குலத்தவர்களாக,இப்போதேனும் நாமனைவரும் ஒன்றாக இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் இதனை விடவும் மோசமான பேரவலங்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலத்தை ஆராய்ந்து. கடந்த காலத் தவறுகளை மீள்பரிசீலனை செய்து, எதிர்காலத்தை சிறப்பாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்.

நாம் பிரிவினைவாத யுத்தத்தை தோற்கடித்ததைப் போன்று, எமது மனங்களில் இருந்து பிரிவினைவாத எண்ணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். பிரிவினைவாத இயக்ககங்களைத் தோற்கடிக்கும் பொறுப்பு இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதனை நிறைவேற்றாவிட்டால், எமது சிறிய நாட்டின் எதிர்காலத்தை இழக்க நேரிடும். ஒரு செல்வந்த நாட்டிலுள்ள கம்பனியொன்றின் வரவு செலவுத் திட்டத்தை விடவும் இலங்கையின் வரவு செலவுத் திட்டம் குறைவானது. குறைந்தளவு மக்களே உள்ளனர். இந்தப் பிரிவினைவாத சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், எமது சந்ததிக்கு சிறந்ததொரு தேசத்தை ஒப்படைக்க முடியும். இதுபோதும். இதனை நிறுத்த வேண்டும்.

அலி சப்ரி

அல்குர்ஆனை முழுமையாக வாசித்து, அதன் சூழ்நிலைப் பொருத்தத்தின்  அடிப்படையில் நாம் புரிந்து கொண்டுள்ளோம். எமது சகோதரனை நேசிக்க வேண்டும் என்பதையே குர்ஆன் கற்றுக் கொடுத்துள்ளது. அயலவரை நேசிக்க வேண்டும்.  அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் மூலம் உங்களுக்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்றே கூறுகிறோம். நீங்கள் ஒருவரது உயிருக்கு பங்கம் விளைவித்தால் முழு மனிதகுலத்திற்கே பங்கம் விளைவிக்கிறீர்கள், ஒருவரது உயிரைக் காப்பாற்றினால் முழு சமூகத்தையே காப்பாற்றுகிறீர்கள் என்று அல்-குர்ஆன் கூறுகிறது. மதத்தைப் பின்பற்றுவதை குர்ஆன் கட்டாயப்படுத்தவில்லை. இத்தகைய விடயங்களையே நாம் புரிந்து கொண்டுள்ளோம். குர்ஆன் என்பது வாழ்க்கை நெறி. அதனை சூழ்நிலைக்குப் பொருத்தமான முறையில் பயன்படுத்தி, ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வது அவசியம். அத்தகைய பொருத்தமான கோட்பாடு காரணமாகவே ஆயிரத்து 100ஆண்டுகளாக முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். சமயங்களை ஒப்பீட்டு ரீதியாக ஆராயும் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும். அப்போது பௌத்தத்தை எமது பிள்ளைகளும், இஸ்லாம் கூறும் செய்தியை  பௌத்த மதத்தைப் பின்பற்றும் பிள்ளைகளும் அறிந்து கொள்வார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2