ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்- அமைச்சர் பி.ஹரிசன்

Share Button

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முனையும் எதிர்கட்;சி, எதிர்க்கட்சியின் பொறுப்புகளை முற்றாக மறந்து செயற்படுவதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிரதான செயற்பாடானது, அரசாங்கத்தை கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதல்ல. மாறாக அரசாங்கத்தை நல்ல பாதைக்கு இட்டுச் செல்வது எதிர்க்கட்சியின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணொறுவவில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவுள்ளது. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும், இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வலுவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11