பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

Share Button

பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்மைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

இம்முறை பெரும்போகத்தின் போது, 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தது. இதற்காக, இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *