அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கி சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

Share Button

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, யாத்திரை ஆகிய பிரதான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியர்கள் நோன்பை நிறைவு செய்யும் வகையில் கொண்டாடும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் இந்த நோன்பு காலத்தில் லௌகீக இன்பங்களிலிருந்து விடுவட்டு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குவதானது அனைத்து தெற்காசிய சமயத் தத்துவங்களும் போதிக்கும் ஆன்மீக நோக்கங்களின் பொதுப் பண்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ரமழான் மாதம் இஸ்லாத்தின் மையக் கருத்தினையும் மானிட சமூகப் பெறுமானங்களையும் சிறப்பாக அறிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும். நீண்டகாலமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அந்த சமயப் பெறுமானங்களை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று, புதிய பிறை கண்ட பின்பு கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தியாகம், மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகிற்கு எடுத்தியம்பும் மிக முக்கியமான சமயப் பண்டிகையாகும் என்று தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5