மத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப துரித வேலைத்திட்டம்

Share Button

மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் இந்த பாடசாலை தவணையிலிருந்து தமது பொறுப்பக்களை ஆரம்பிக்கவுள்ளனர். இரண்டாவது கட்டமாக சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்காக 271 ஆங்கில ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தொழில்நுட்பம், அலகியல், வணிகம், விஞ்ஞானம், ஆரம்பநிலை விசேட கற்கைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் காலங்களில் நிரப்பப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *