உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு வெற்றி.

Share Button
உலகக் கிண்ண சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்
இந்த சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டிகளில் இந்தியாவும், நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
சுற்றுத்தொடரின் எட்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 9 விக்கட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை பெற்றது. இந்திய வீரர்கள் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து, 48ஆவது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டினார்கள். ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களை பெற்ற ரோஹித் சர்மா சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
மின்விளக்கொளியில் லண்டனில் இடம்பெற்ற 9ஆவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து வீரர்கள் 48ஆவது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டினார்கள். ஆகக் கூடுதலாக 82 ஓட்டங்களை பெற்ற ரொஸ் டெயிலர் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11