தாய்லாந்தின் பிரதமராக இராணுவ மேலதிகாரி பிரயுத் சான் ஓச்சா மீண்டும் தெரிவு.

Share Button

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இராணுவ சதிபுரட்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய ஜெனரல் பிரயுத் சான் ஓச்சா, தாய்லாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக பிரதமராக பதவி வகித்த பிரயுத்திற்கு 500 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 244 வாக்குகள் கிடைத்தன.

ஜனநாயக மாற்றத்திற்காக போராடும் ஃபியுச்சர் ஃபோவர்ட் என்ற கட்சியின் வேட்பாளரை அவர் தோற்கடித்தார். இந்த வேட்பாளர் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானபோதும், அரசியல் யாப்பு நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *