வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

Share Button

இலங்கையின் பாதுகாப்பு நிலை தொடர்பில் வெளிநாட்டவர்கள் கொண்டுள்ள அச்சம் மற்றும் இலங்கைக்கு சுற்றுலா செய்வது தொடர்பில் அந்தந்த நாடுகள் விடுத்துள்ள ஆலோசனைகளை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று 17 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

தற்போது இலங்கையில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 35ல் இருந்து 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நியமனங்களில் 60 சதவீதமானவை அரசியல் நியமனங்களாகவே இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *