உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரையும் பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share Button

ஏப்பிரல் 21ஆம் திகதித் தாக்குதல் தொடர்பில் எந்தவொரு நபரையும் பாதுகாக்கும் தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லையென பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்ட அவர், இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்குவதற்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியதாகவும் பிரதியமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார்.

இனம் மற்றும் மதம் என்ற வகையில் பிரிவுபடாமல் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இதன் போது தெரிவித்தார்.

ஐஎஸ்.ஐஎஸ். பயங்கரவாதத்தை அழிப்பதில் இலங்கை அரசாங்கம் சாதனை படைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான குறிப்பிட்டார். முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பே அதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11