உலகக் கிண்ண கிரிக்கெட் 2019 16ஆவது போட்டி இன்று இலங்கை பாகிஸ்தான் மோதல்

Share Button
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இதில் மோதவிருக்கின்றன. புள்ளிகளின் அடிப்படையில், இலங்கை அணி 7ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 8ஆவது இடத்திலும் உள்ளன.
இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியிடம் எந்தவொரு போட்டியிலும் தோல்வி அடையவில்லை. பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சதாப் கான் 50 விக்கட்டுக்கள் என்ற மைல் கல்லை தாண்டுவதற்கு இன்னும் ஒரு விக்கட்டை மாத்திரமே கைப்பற்றுவது அவசியமாகும். இலங்கை கிரிக்கட் அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வரிசை காணப்படுவதாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *