பதவிகளை இராஜினாமாச் செய்த முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

Share Button

அமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமாச் செய்த  முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தனர். விஜயராமையில் உள்ள எதிர்கட்சித் தலைவர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட 9 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நிலைமை குறித்தும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேறியமை தொடர்பான விடயங்கள் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்திருக்கூடாதென்று தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2