நாட்டில் சுதந்திரம் மற்றும் அமைதிச் சூழ்நிலை மீண்டும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு

Share Button

நாட்டில் சுதந்திர தினம் மற்றும் சமாதான சூழ்நிலை மீண்டும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக  இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு பிரிவினால் முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் விமானப் பிரிவின் 15 வருட நிறைவு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவடைந்த 10 வருட நிறைவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற படைவீரர்கள்;;;;;;; நடைபவனி நிறைவு வைபவத்தில் இன்று இராணுவத்தளபதி உரையாற்றினார். இந்த நடைபவனி கடந்த 29ஆம் திகதி மதவாச்சியில் ஆரம்பமானது. கடந்த 11 நாட்களாக இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது. மக்களின் அன்னாட வாழ்க்கை வழமையான நிலைக்கு திரும்பியிருப்பதாகவும் அவர் கூறினார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *