இந்திய பிரதமர் நாளைக் காலை இலங்கை விஜயம்

Share Button

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாளை காலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமரின் இலங்கைக்கான இந்த விஜயம் இரணடாவது முறையாக இடம்பெறுகிறது. இந்தியப் பிரதமர் இரண்டாவது முறையாக பிரதமாராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அழைப்புக்கு அமைவாக பிரதமரின் மோதியின் விஜயம் இடம்பெறுகிறது. இந்திய பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இதன்போது இடம்பெறவுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பின்போது முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்திய பிரதமரின் இந்த விஜயம் இன்று அவர் ஆரம்பித்துள்ள மாலைதீவுக்கான விஜயத்தை பூர்த்தி செய்த பின்னர் இடம்பெறவுள்ளது. நாளை மாலை இவர் இந்தியா திரும்பவு;ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2