கெக்கிராவ வாகன விபத்தில் – 3 சிறுவர்கள் உயிரிழப்பு

Share Button

இன்று காலை கெக்கிரவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரோசகல சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து கெக்கிரவ நோக்கி சென்று கொண்டிருந்த கெப் வாகனம் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது. பலத்த காயங்களுக்குள்ளான சிறுவர்கள் கெக்கிரவா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்கள் 14, 15, மற்றும் 16 வயதுகளைக் கொண்டவர்கள். பலத்த காயங்களுக்கு உள்ளான இன்றுமொரு சிறுவன் ஒருவன் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள பெரியாஸ்பததிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவர்கள் கோரோசகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணமான வாகனசாரதி  இபலோகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்றைய தினமும் சில வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *