ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்ரிக் உற்பத்திகளைத் தடைசெய்யத் தயாராகும் கனடா.

Share Button

2021ஆம் ஆண்டிற்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்ரிக் வகைகளை கனடா தடை செய்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அறிவித்துள்ளார். கடலில் கொட்டப்படும் கழிவுகளை குறைப்பது இதன் நோக்கமாகும். கடந்த வருடம் ஐரோப்பியம் மற்றும் ஏனைய நாடுகளில் நிறைவேற்றப்பட்ட சட்ட ஒழுங்கிற்கு இணைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் பொருட்களைத் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் கம்பனிகளுக்கு இலக்குகளை நிர்ணயிக்கவுள்ளதாகவும் பிரதமர் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிளாஸ்ரிக் கழிவுகளுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்புக்கூற வைப்பது இதன் நோக்கமாகும். தற்போது கனடாவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் பொருட்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தப் பிளாஸ்ரிக் பொருட்களின் மாசை ஒரு உலக சவாலாக ட்ருடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *