வில்பத்து வனப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது -கடற்படை

Share Button
வில்பத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இந்தப் பகுதியில் பாதுகாப்பு நிமித்தம் இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
முள்ளிக்குளத்திலும், சிலாவத்துறையிலும் இரண்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாடிகுளம் என்ற இடத்தில் 26 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்காகவே படையணியொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அந்தப் படையணி அப்புறப்படுத்தப்பட்டமை பற்றி குறித்த செய்திப் பத்திரிகை தவறான முறையில் அர்த்தம் கற்பித்து செய்தி வெளியிட்டுள்ளது என கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *