உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது

Share Button

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் 16ஆவது போட்டி இன்று பிரிஸ்ட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும். 3 புள்ளிகளுடன் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் காணப்படுகிறது. பங்களாதேஷ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் உள்ளது. இதனிடையே, இன்றைய போட்டியில் நுவன் பிரதீப் விளையாட மாட்டார். காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதுவரையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 43 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 36 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணி 7 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *