பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறது

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ளது. மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று ஆணைக்குழுவின் முன் சாட்சி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவரும், காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் ஆணைக்குழுவில் பிரசன்னமாவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வெளியிடப்படும் கருத்துக்கள் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராய்வதற்கு எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *