பாராளுமன்றத் தெரிவுக் குழு நடவடிக்கைகளில் தலையிடுவதற்கான உரிமை அமைச்சரவைக்கு இல்லை என பிரதமர் கூறுகிறார்

Share Button

அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தாமல் இருப்பதனால் மாத்திரம் அமைச்சரவை கலைவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தான் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதும், தனது சிபார்சில் அமைச்சு நியமிக்கப்பட்டிருப்பதும் பாராளுமன்ற அனுமதியுடனாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இறைமையையும் பாராளுமன்றத்தின் சுயாதீனத் தன்மையினையும் காட்டிக் கொடுக்கும் வகையில் தான் ஒருபோதும் செயற்படப் போவதில்லை என அவர் கூறினார். புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும்போது ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு தெரிவுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய மலலகொடக் குழுவின் அறிக்கை தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. அதில் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படாத முஸ்லிம்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை அமைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு மாத்திரம் உள்ளதாக பிரதமர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா காத்தான்குடியில் தெரிவித்துள்ள கருத்துக்களை அரசாங்கம் கண்டிப்பதாக பிரதமர் கூறினார்.

சமயங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சமய நல்லிணக்க குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11