எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று

Share Button

‘வளமான தேசத்தின் வாவிப்புரட்சி’ எல்லங்கா குளக் கட்டமைப்பினை புனரமைக்கும் செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

குருணாகல் மேற்கு – பண்டுவஸ்நுவரவில் உள்ள கொடகிம்புலாகட அணைக்கட்டுக்கு அருகாமையில் பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

3000 ஏக்கர் வயற் காணிகளில் அறுவடையை மேற்கொள்வதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் இணைந்ததாக 21 வாவிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் இந்த செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

எல்லங்கா குளக் கட்டமைப்புடன் இணைந்த 2 ஆயிரத்து 400 கிராமிய வாவிகளை புனரமைக்கும் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரம் மாவட்டத்தின் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எல்லங்கா திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயலிழந்து காணப்படும் குளக் கட்டமைப்பினை மீண்டும் புனரமைத்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கான நீரை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *