சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு – 16 பேர் உயிரிழப்பு

Share Button

சீனாவில் ஏற்பட்ட வெள்ளிப்பெருக்கினால் குறைந்த பட்சம் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்து 300 பேர் வரையில் வீடுவாசல்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 17 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குவாங்ஸி ஜுவாங் பிராந்தியத்தின் 32 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பிராந்தியத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்தும் மழை பெய்யும் என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *