இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தொழில்வாய்ப்புக்களுக்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்து.

Share Button

இலங்கையர்களுக்கு ஜப்பானில் 14துறைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் – ஜப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ஜப்பானிய நீதிமன்ற, தொழில் மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு இடையில் ஜப்பானில் இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தமானது 10வருடங்களுக்குச் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மாத்திரமே ஜப்பான் தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தரும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *