2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சில தலையீடுகளை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

Share Button

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சில தலையீடுகளை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மீது பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினுடனான விசேட சந்திப்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளது. இதுவிடயம் குறித்து அமெரிக்கக் குடியரசு செனட் சபை அங்கத்தவர் ஜோன் மெக்கேன், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கூற்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *