அமைச்சுக்களின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி நிதி அமைச்சினால் மறுத்துரைப்பு.

Share Button
நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக் கொண்டு 21 வருடங்கள் வரை 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்க முடியாமல் போனதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் சமுர்த்தி அமைச்சு கிடைக்கப் பெற்று ஒரு வருடத்திற்குள் 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளது. 6 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கொழும்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க மைதானத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது. வங்குரோத்து மிக்க நாடொன்றை பொறுப்பேற்று அதனை பலமான நாடாக மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது. கிராமிய மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களால் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் இலக்காகுமென அங்கு உரையாற்றிய அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்திசாலித்தமாக செயற்பட்டதால் நாட்டை சரியான பாதைக்கு எடுத்து வர முடிந்துள்ளது. சமுர்த்தி நிவாரணத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்தி அவர்களை நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பங்குகொள்ளச் செய்யும் நோக்கில் புதியதாக சிந்திப்போம். சுயமாக முன்னேறுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *