உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி.

Share Button

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஸி வென்டர் துசேன் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பெற்றார். ஹஷீம் அம்லா 55 ஓட்டங்கள், நியூசிலாந்து அணி சார்பாக லொக்கி பேகியூசன் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48 ஓவர்கள் 3 பந்துகளில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. கேன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். கொலின் டி கென்ஹோம் 60 ஓட்டங்களை பெற்றார். தென்னாபிரிக்க அணி சார்பில் கிறிஸ் மொரிஸ் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். கேன் வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11