சிறு குழந்தைக்கு மதுபானத்தை அருந்தச் செய்த தந்தை உட்பட நான்கு பேர் கைது.

Share Button

தமது நண்பர்களுடன் விருந்தொன்றின் போது சிறு குழந்தைக்கும், மதுபானம் ஊட்டியதாகக் கூறப்படும் தந்தை உட்பட நான்கு பேரை அனுராதபுரம் – மீகலேவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் நால்வரும் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குழந்தையை கொடூர தன்மைக்கு உட்படுத்தியதாகக் கூறி, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை கொடூர நிலைக்கு உட்படுத்திய தவறுகள் குறித்து இந்த வருட முதல் ஆறு மாத காலப்பகுதியில் 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 98 ஆகும். சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *