இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் உயர் மதிப்பு

Share Button

இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நொக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விசேட தேயிலைக் கண்காட்சி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வருடாந்தம் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி மூலம் 250 கோடி ரூபா வருமானமாகப் பெறப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தேயிலை உற்பத்தி, தற்போது அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *