போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நிவாரண வேலைத்திட்டத்திற்காக முப்படை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நிறைவேற்றும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

Share Button

சட்டரீதியான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நிவாரணத்திற்காக முப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகள் மேற்கொள்ளும் விசேட பணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.

திருகோணமலை – சமுத்திர விஞ்ஞான பீடத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை, அதிகார சபைக்குள் உள்வாங்குவதற்காக இந்த பீடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டார்.

விஞ்ஞான பீடத்தில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 89 பேர் அதிகார சபைக்குள் உள்வாங்கப்பட்டனர். இலங்கை கடற்படை கொண்டுள்ள4வது அதிவேக தாக்குதல் வள்ளம் அதிகார சபைக்குள் உள்வாங்கப்பட்டது. ஜனாதிபதி இதற்கான சமிக்ஞையை வெளிக்காட்டி இதற்கான நிகழ்வை நிறைவு செய்தார்.

8********

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுவூட்டல் மற்றும் மொத்த இலங்கையர்களையும் இதற்காக ஒன்றுதிரட்டுவது இதன் நோக்கமாகும்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அடுத்த மாதம் 1ம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்குள் பாடசாலைகளில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *