வடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவிப்பு.

Share Button

வடக்கில் இயங்கிய ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே இந்தக் குழுவில் உள்ளனர். இவர்களில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர். இவர்கள் எந்தவொரு படுகொலையையும் செய்யவில்லை என்றும், தாக்குதல்களை மாத்திரமே மேற்கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதாள உலக கோஷ்டியினருக்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை என குறிப்பிட்டார். இவ்வாறானவர்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் கடந்த அரசாங்கமே ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11