தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் போராளிகள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்- ஐ நா சபை அறிவிப்பு.
ஈராக் மற்றும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஐஎஸ் பேராளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தமது பிரஜைகளுக்கான பொறுப்பை அந்தந்த நாடுகளே வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் செய்திருக்காவிட்டால் மீண்டும் அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
ஐஎஸ் அமைப்பின் இறுதி கோட்டை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றப்பட்டது. இதன் போது 55ஆயிரம் பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் பிறந்த ஐஎஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளை தமது பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள சில நாடுகள் மறுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.