சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கத் தயாரென பிரதமர் தெரிவிப்பு.

Share Button

ஐக்கிய தேசியக் கட்சி திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதால் சர்வதேச நாடுகளுடன் மிகவும் வேகமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் நாட்டிற்குக் கிடைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி முதலீட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். முத்துராஜவெல புதிய உராய்வு எண்ணெய் கைத்தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,. எங்களால் கடனைச் செலுத்த முடியும். கடந்த இரு மாதங்களிலும் எமக்கு இரண்டாயிரம் மில்லியன் டொலர் தேவைப்பட்டது. அதனை அமெரிக்காவிடமும், இலங்கிலாந்திடமும் கேட்டோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் காசு கிடைக்காதென சிலர் கூறினார்கள். அனால், அந்த வேலைகள் முடியவில்லை. எனினும், எத்தனை பேர் இலங்கை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது நாளை தெரியும். பலர் ஆச்சர்யப்படுவார்கள். நாம் கஷ்டப்பட்டாவது பொருளாதாரத்தை சரி செய்தததால். அடுத்து வரும் மாதங்களில் நாட்டை முன்னேற்றிச் செல்லக்கூடிய வகையில் உதவிகள் கிடைத்துள்ளன.

நாம் முடங்கிக் கிடக்காமல் நாட்டின் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நிதி வழங்கினோம். பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும், இலவசமாக ஸ்டென்ட் வழங்குவதற்கும், வீடுகளை அபிவிருத்தி செய்வதற்கும், தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் நிதியைப் பெற்றுக் கொடுத்தோம் என்று குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *