போதைப் பொருள் சட்டத்தை சீர்திருத்த நடவடிக்கை

Share Button
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் போதைப் பொருள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரட்ன தெரிவித்தார்.
போதைப் பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரதேசங்கள் முதலில் கண்டறியப்படும். பின்னர் அந்தப் பிரதேசத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, போதைப் பொருள் தொடர்பிலான சட்டத்தை சீர்திருத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *