முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று.

Share Button
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றில் ஆஜராகும்படி, அனுர சேனாநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ரகர் விளையாட்டு வீரர் தாஜூதீனின் படுகொலை தொடர்பான தகவல்களை மறைத்தார் என இவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் முன்வைத்த குற்றப் பத்திரிகையை கையளிப்பதற்காக இவரை நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *