நடைமுறையிலுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தல்

Share Button

நாட்டில் தற்போது காணப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவைகளை சகல தரப்பினரும் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக சகல குற்றவாளிகளையும் இனங்கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், நாட்டுக்குள் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பின்னர் நாட்டை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வர முடிந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். அவசரகால சட்டத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறாமல் தவிர்க்கும் பொறுப்பு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *