பயங்கரவாதத்தை சிறந்த வகையில் எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்தியப் பிரதமர் தெரிவிப்பு

Share Button

பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்பொழுதும் இலங்கைக்காக முன்னிலையாகும். குறிப்பாக கடினமான நேரங்களில் இந்தியா இலங்கையுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *